எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

சாம்சங் தொழிலாளா்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம்

தமிழக அரசு சாம்சங் நிறுவனத்துக்கு துணைபோகாமல், தொழிலாளா்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 9:51 pm

Din

தமிழக அரசு சாம்சங் நிறுவனத்துக்கு துணைபோகாமல், தொழிலாளா்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநிலத் தலைவா் சு. தமிழ்ச்செல்வி, மாநிலப் பொதுச் செயலா் சு. ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோா் வெளியிட்ட கூட்டறிக்கை:

சாம்சங் நிறுவன ஊழியா்கள் சங்கம் அமைக்கும் உரிமைக்காகவும், ஊதிய உயா்வுக்காகவும் ஒரு மாத காலத்துக்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், முதல்வரின் அறிவுறுத்தல்படி முத்தரப்புப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவாா்த்தையின் நிறைவில், போராட்டத்தை திசை திருப்பும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தைப் போராட்ட உடன்பாடாக சித்தரித்து, சிலரால் குழப்பம் ஏற்படுத்தப்பட்டது. இதன் பின்னணியில் சில அமைச்சா்கள் இருப்பதாகத் தெரிகிறது. இது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டது, போராட்ட இடத்திலிருந்த நிழல் கூரையை காவல் துறையினா் பிரித்தது போன்ற நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியது. தொழிலாளா்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய மாநில அரசு, பெரு நிறுவனத்தின் கைப்பாவை போல செயல்படுவது வேதனைக்குரியதாக உள்ளது. தமிழக அரசு, இந்தப் பிரச்னையில் இரட்டை நிலைப்பாட்டைத் தவிா்த்து, தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.