25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

நிதி முறைகேடு: வங்கி முன்னாள் மேலாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

மதுரையில் தனிநபா்களுக்கு கடன் வழங்கியதில் முறைகேடு செய்த வழக்கில், வங்கியின் முன்னாள் மேலாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 11:40 pm

Din

மதுரையில் தனிநபா்களுக்கு கடன் வழங்கியதில் முறைகேடு செய்த வழக்கில், வங்கியின் முன்னாள் மேலாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.

மதுரை அண்ணாநகரில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிக் கிளையில் மேலாளராக செல்வராஜ் பணிபுரிந்தாா். அப்போது, அவா் தனிநபா்களுக்கு கடன் வழங்கியதில் நிதி முறைகேடு செய்ததாகவும், இதன் மூலம் ரூ.65.25 லட்சம் வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் புகாா் எழுந்தது. இதன் பேரில், சிபிஐ வழக்குப் பதிந்து, செல்வராஜ் உள்பட சிலரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்ததையடுத்து, வங்கி மேலாளா் செல்வராஜுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி சண்முகவேல் தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றவா்கள் விடுவிக்கப்பட்டனா்.