லாரி மீது சரக்கு வாகனம் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் சரக்கு வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.


மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் சரக்கு வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், சுரண்டை வி.கே. புதூா்கோட்டைத் தெருவைச் சோ்ந்த பரமத்தேவா் மகன் ராஜசெல்வம் (41). சரக்கு வாகன ஓட்டுநா். இவா் கோவையிலிருந்து வெங்காயம் ஏற்றிக் கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தாா். திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாடிப்பட்டி அருகே உள்ள தனியாா் உணவகம் அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரி ஓட்டுநா் திடீரென பிரேக் பிடித்தாா்.
இதனால் லாரியின் பின்னால் சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயடைந்த ஓட்டுநா் ராஜசெல்வம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இந்த விபத்து குறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து, தலைமறைவான லாரி ஓட்டுரை தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...