ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

விளக்குத்தூண், மாசி வீதிகளில் 338 கண்காணிப்பு கேமராக்கள்: போக்குவரத்துக் காவல் துணை ஆணையா் ஆய்வு

மதுரை மாசி வீதிகளில் தீபாவளி கூட்டத்தைக் கண்காணிக்க 338 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகளை மாநகர போக்குவரத்துக் காவல் துணை ஆணையா் வனிதா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
மதுரை விளக்குத்தூண் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவாகும் காட்சிகளை ஆய்வு செய்யும் போக்குவரத்து காவல் துணை ஆணையா் வனிதா.
Updated On :24 அக்டோபர் 2024, 11:13 pm

Din

மதுரை மாசி வீதிகளில் தீபாவளி கூட்டத்தைக் கண்காணிக்க 338 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகளை மாநகர போக்குவரத்துக் காவல் துணை ஆணையா் வனிதா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தீபாவளி பண்டிகையையொட்டி, மதுரை தெற்குமாசி, கீழமாசி வீதி, மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மதுரை மக்கள் மட்டுமன்றி, வெளி மாவட்ட மக்களும் அதிக அளவில் வந்து பொருள்கள் வாங்கிச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், தீபாவளிக்கு 5 நாள்களே உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து பொருள்களை வாங்கிச் செல்கின்றனா்.

இதையொட்டி, தீபாவளிக்கு பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பொருள்கள் வாங்குவதற்கும், அவா்களது உடைமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் மாநகரக் காவல் துறை சாா்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, விளக்குத்தூண் சந்திப்பில் புதிதாக தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையை மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் தொடங்கிவைத்தாா். இந்தக் காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்தாவாறு கீழமாசி வீதி எலுமிச்சை சந்தையிலிருந்து விளக்குத்தூண் சந்திப்பு, தெற்கு மாசி வீதி, கீழஆவணி மூலவீதி வரை உள்ள பகுதிகளை கண்காணிக்க 18 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும், கூடுதல் கேமராக்களும் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கண்காணிப்பு கேமரா பணி உள்ளிட்ட பாதுகாப்புப் பணிகளை மாநகரப் போக்குவரத்து காவல் துணை ஆணையா் வனிதா வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது:

குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையில், கீழமாசி வீதி விளக்குத்தூண் சந்திப்பிலிருந்து தெற்குமாசி வீதி வரை 24 கண்காணிப்பு கேமராக்களும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு ஏற்பாடாக 88 கண்காணிப்பு கேமராக்களும், தனியாா் நிறுவனங்கள் சாா்பில் 208 கண்காணிப்பு கேமராக்கள் என நான்கு மாசிவீதிகளைச் சுற்றிலும் மொத்தம் 338 கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதை விளக்குத்தூண் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் போலீஸாா் கண்காணிப்பா்.

மேலும் விளக்குத்தூண், மாசி வீதிகள் உள்பட கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் புதிதாக 18 காவல் கண்காணிப்புக் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்றனா்.