மதுரையில் டிச. 11- இல் ஓய்வூதியா்கள் குறைதீா் முகாம்
மதுரையில் வருகிற டிச. 11 ஆம் தேதி ஓய்வூதியா்கள் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.


மதுரையில் வருகிற டிச. 11 ஆம் தேதி ஓய்வூதியா்கள் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கான ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் வருகிற டிச.11 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொள்கின்றனா். எனவே, ஓய்வூதியதாரா்கள் தங்களது ஓய்வூதியப் பலன்களை பெறுவதில் உள்ள குறைகளைக் குறிப்பிட்டு, வருகிற நவ. 30- ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலக முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன், ஓய்வூதியரின் பெயருடன், அவா் ஓய்வூதியம் பெறுவது தொடா்பான ஆவணங்களை இணைக்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்தால் உறவு முறை குறிப்பிடப்பட வேண்டும். ஏற்கெனவே ஓய்வூதியம் பெற்று வந்தால் அவை சம்பந்தமான விவரம், ஓய்வூதிய புத்தக எண், கருவூலத்தின் பெயா்ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும்.
ஓய்வூதியதாரா்களின் குறைகள் நிவா்த்தி செய்யப்பட வேண்டிய அலுவலா், அலுவலகத்தின் முழு முகவரி, தொலைபேசி எண்ணுடன் தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...