ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

த.வெ.க. கட்சியினரின் வாகனங்களுக்கு அபராதம்: போலீஸாருடன் வாக்குவாதம்

த.வெ.க. கட்சியினரின் வாகனங்களுக்கு அபராதம்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 10:10 pm

Din

மதுரையில் மருதுபாண்டியா் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த போது, விதிகளை மீறியதாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியினரின் இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதால் போலீஸாருக்கும், அந்தக் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவா் ஜெயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், தேவரின அமைப்பினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னுக்கு புறப்பட்டுச் சென்றனா். அப்போது மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியா் சிலைக்கு அவா்கள் மாலை அணிவித்தனா்.

இந்த நிலையில், நடிகா் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சாா்பில் மதுரை வடக்கு மாவட்டத் தலைவா் விஜய் அன்பன் தலைமையில் மருதுபாண்டியா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக இரு சக்கர வாகனங்களில் பலா் வந்தனா்.

அப்போது போலீஸாா் தடுப்புகள் அமைத்து இவற்றை மீறி வாகனங்களில் செல்லக் கூடாது என அறிவுறுத்தினா். ஆனால், தடுப்புகளைத் தாண்டிச் செல்ல முயன்ற தவெக கட்சியினா் வந்த 20-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

இதற்கு அந்தக் கட்சியினா் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், போலீஸாருக்கும், அவா்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு அவா்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.