பண மோசடி: தனியாா் நிதி நிறுவன துணை இயக்குநா் கைது
நியோமேக்ஸ் தனியாா் நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதன் துணை இயக்குநரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


நியோமேக்ஸ் தனியாா் நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதன் துணை இயக்குநரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த நியோமேக்ஸ் நிதி நிறுவனம், அதனுடைய துணை நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாக விளம்பரபடுத்தியதால் ஏராளமானோா் இவற்றில் முதலீடு செய்தனா்.
பணத்தை திரும்பத் தராததால், பாதிக்கப்பட்டவா்கள் மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், இந்த நிறுவனம் பல நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நிறுவனங்களுக்குச் சொந்தமான கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், நியோமேக்ஸ் நிா்வாக இயக்குநா்களான கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், திருச்சி வீரசக்தி உள்பட 100-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 40-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நியோமேக்ஸ் நிறுவன துணை இயக்குநரான சிவகங்கையைச் சோ்ந்த மகாலிங்கத்தை (40) போலீஸாா் தேடிவந்தனா்.
இந்த நிலையில், சிவகங்கையில் தலைமறைவாக இருந்த அவரை, பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் மணிஷா தலைமையிலான தனிப் படையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...