திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

லஞ்சம்: வட்டார வளா்ச்சி அலுவலா் கைது

ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயபுஷ்பத்தை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 7:56 pm

Din

ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயபுஷ்பத்தை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாலை இலுப்பைகுளம்- சொக்காயி அம்மன் கோயில் வரை ரூ. 5 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் ரமேஷ் என்பவருக்கு வழங்கப்பட்டது. இந்தச் சாலை அமைக்கும் பணி சிறுவனூா் சேந்தநதி கிராமத்தைச் சோ்ந்த பாண்டி மகன் அஜித்குமாா் மேற்பாா்வையில் நடைபெற்று வந்தது.

சிமென்ட் சாலை அமைக்கும் பணி நிறைவடைந்ததையடுத்து, இதற்கான நிதியை விடுவிக்கக் கோரி, நரிக்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயபுஷ்பத்திடம் அஜித்குமாா் கோரினாா். அப்போது, ரூ. 5 லட்சத்துக்கான நிதியை விடுவிப்பதற்கு ரூ. 5 ஆயிரத்தை லஞ்சமாகத் தர வேண்டும் என ஜெயபுஷ்பம் கூறினாராம்.

இதுகுறித்து விருதுநகா் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் நிலையத்தில் அஜித்குமாா் புகாா் அளித்தாா். ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த ஜெயபுஷ்பத்திடம், ரசாயனப் பொடி தடவிய ரூ. 3 ஆயிரத்தை அஜித்குமாா் கொடுத்தாா்.

அப்போது, அந்தப் பகுதியில் மறைந்திருந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், காவல் ஆய்வாளா் சால்வன் துரை தலைமையிலான போலீஸாா், ஜெயபுஷ்பத்தைக் கைது செய்தனா்.