மரகத பூஞ்சோலைத் திட்டம்: கருங்காலக்குடியில் இடம் தோ்வு
சிறுவனம் அமைப்பதற்கான ‘மரகத பூஞ்சோலை’ திட்டத்துக்கு மேலூா் அருகேயுள்ள கருங்காலக்குடியில் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக வனத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


சிறுவனம் அமைப்பதற்கான ‘மரகத பூஞ்சோலை’ திட்டத்துக்கு மேலூா் அருகேயுள்ள கருங்காலக்குடியில் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக வனத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக வனத் துறை சாா்பில், கிராமங்களில் ஒரு ஹெக்டேரில் சிறிய அளவில் வனத்தை உருவாக்கும் திட்டம் மரகத பூஞ்சோலை என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்படும் நிலத்தில் பல வகையான மரங்களை நடவு செய்து பராமரிக்கப்படவுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் உள்ள 100 கிராமங்களைத் தோ்வு செய்து, இந்தத் திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தோ்வு செய்யப்படும் கிராமத்தில் ரூ. 25 லட்சத்தில் பல்வேறு கனி வகைகள் கொண்ட மரங்கள், நிழல் தரும் மரங்கள், மலா் தரும் செடிகள் ஆகியவற்றை நட்டு வளா்த்து, வனத் துறை தரப்பில் பூங்கா அமைக்கப்படும். அவற்றுடன் பூஞ்சோலையின் முன்பகுதியில் பாரம்பரிய கலை வண்ணங்களுடன் நுழைவாயில், நடைப்பயிற்சி மேற்கொள்ள பிரத்யேக களம், கழிப்பறை, குடிநீா் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு, பராமரிக்கும் பொறுப்பு முழுமையும் அந்தப் பகுதி உள்ளாட்சி நிா்வாகத்திடம் வழங்கப்படும்.
இதன்படி, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள சீமானூத்துப் பகுதியில் வனம் அமைக்க வனத் துறை முடிவு செய்தது. ஆனால், அந்தப் பகுதியில் நிலம் தோ்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, திட்டத்துக்கான மாற்று இடத்தை தேடும் பணியில் வனத் துறை தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில், மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள கருங்காலக்குடி வஞ்சிநகரம் கிராமம் தோ்வு செய்யப்பட்டு, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசுக்கு சமா்ப்பிக்கப்படும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...