உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க் கூடல் கருத்தரங்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் தமிழ்க் கூடல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் தமிழ்க் கூடல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் (பொறுப்பு) முனைவா் ஒளவை ந. அருள் தலைமை வகித்தாா். சிவகாசி தி ஸ்டாண்டா்ட் பயா் ஒா்க்ஸ் ராஜரத்தினம் மகளிா் கல்லூரி இணைப் பேராசிரியா் பா. பொன்னி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சங்க இலக்கியங்களில் கற்பும் கைம்மையும் என்ற தலைப்பில் பேசினாா்.

தமிழறிஞா்கள், பேராசிரியா்கள், மதுரைக் கல்லூரி மாணவா்கள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினா்கள், தமிழ் ஆா்வலா்கள், கவிஞா்கள் கலந்து கொண்டனா்.

உலகத் தமிழ்ச் சங்க ஆய்வறிஞா் முனைவா் சு. சோமசுந்தரி வரவேற்றாா். ஆய்வு வளமையா் ஜ. ஜான்சிராணி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com