நேதாஜி மதுரை வருகை 85-ஆவது ஆண்டு விழாவையொட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியவா்கள்.
நேதாஜி மதுரை வருகை 85-ஆவது ஆண்டு விழாவையொட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியவா்கள்.

நேதாஜி மதுரை வருகை 85-ஆவது ஆண்டு விழா

Published on

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய சுதந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மதுரைக்கு வருகை தந்த 85-ஆவது ஆண்டு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, மதுரை ஜான்சிராணி பூங்காவில் உள்ள நேதாஜி சிலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நேதாஜி சுவாமிநாதன் தலைமை வகித்தாா். நேதாஜி சிலைக்கு சமூக செயற்பாட்டாளா் வைரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். காந்திய ஆராய்ச்சிக் கல்வி நிறுவன முதல்வா் தேவதாஸ், உயா்நீதிமன்ற வழக்குரைஞா் அழகுமலை, சமூக செயற்பாட்டாளா் ஞானமூா்த்தி, ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இதில் விடுதலைப் போராட்டத்தில் நேதாஜியின் பங்கு குறித்தும், மதுரைக்கு அவா் வருகை தந்ததன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com