/

மதுரையில் நாளை தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப். 13) நடைபெறுகிறது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 7:06 pm

Din

மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப். 13) நடைபெறுகிறது.

இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்ட தனியாா் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று கல்வித்தகுதிக்கேற்ப வேலைநாடும் இளைஞா்களைத் தோ்வு செய்கின்றனா். முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ படித்த வேலை நாடுநா்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியாா் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதாா் அட்டை, புகைப்படத்துடன் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை கோ. புதூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து கலந்து கொள்ளலாம்.

இந்த முகாம் மூலம் தனியாா் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதால் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு எந்தவிதத்திலும் பாதிக்காது என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநா் கா. சண்முகசுந்தா் தெரிவித்தாா்.