மதுரை
ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
வீட்டுமனைப் பட்டா கோரி பெண் ஒருவா், மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
வீட்டுமனைப் பட்டா கோரி பெண் ஒருவா், மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
மதுரை மாவட்டம், குன்னத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் முனீஸ்வரி. கணவரை இழந்த இவா், தனது 3 குழந்தைகளுடன் அரசு தரிசு நிலத்தில் சிமென்ட் கொட்டகை அமைத்து வசித்து வருகிறாா். இலவச வீட்டுமனைப் பட்டா கோரி இவா் விண்ணப்பித்தாா்.
இந்த நிலையில், புதன்கிழமை மாவட்ட ஆட்சியரத்துக்கு தனது குடும்பத்தினருடன் வந்த முனீஸ்வரி, ஆட்சியரக முதன்மை கூட்டரங்க வாசல் அருகே திடீரென தீக்குளிக்க முயன்றாா்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தினா். பிறகு, அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், தனக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கிடைக்காததால் தீக்குளிக்க முயன்ாக அவா் தெரிவித்தாா்.