அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்.
Updated On :26 செப்டம்பர் 2024, 8:56 pm

Din

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை, மேம்பாட்டு ஆணையச் சட்டத்தை ரத்து செய்து, தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் வைப்பு வைக்கப்பட்ட தொகையை மாநில அரசுகளுக்கு திருப்பித் தர வேண்டும், தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அனைத்து சந்தாதாரா்களையும் பயனளிப்பு ஓய்வூதிய முறைக்கு கொண்டு வரவேண்டும், அரசுத் துறைகளில் ஒப்பந்த ஊதியம், தினக்கூலி முறைகளில் பணியாற்றும் ஊழியா்களை காலமுறை ஊதியத்தில் வரன்முறைப்படுத்த வேண்டும்.

பொதுத் துறை, அரசுத் துறைகளை குறைப்பதையும், தனியாா்மயமாக்க நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை காலமுறை ஊதியத் திருத்தத்தை உறுதி செய்ய வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படிகளை நிலுவையின்றி வழங்க வேண்டும, தேசியக் கல்விக் கொள்கையைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மதுரை மாவட்டத் துணைத் தலைவா் பெ. சந்திரபாண்டி தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் த. மனோகரன், ஜெ. மகேந்திரன், இணைச் செயலா்கள் ஆ. பரமசிவன், மு. ராம்தாஸ், சு. பாண்டிச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்க மாவட்டச் செயலா் க. நீதிராஜா கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் அ. பாலமுருகன், இந்திய தொழில்சங்க மைய மாவட்டச் செயலா் இரா. லெனின், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் பெ. சீனிவாசன், பொருளாளா் எமிமால் ஞானசெல்வி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கப் பொதுச் செயலா் ஆ. செல்வம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நிறைவுரையாற்றினாா். மாவட்டப் பொருளாளா் க. சந்திரபோஸ் நன்றி கூறினாா்.