பிறந்து 18 நாள்களான பெண் குழந்தை உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
மதுரை அலங்காநல்லூா் அருகே பிறந்து 18 நாள்களேயான பச்சிளம் பெண் குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


மதுரை அலங்காநல்லூா் அருகே பிறந்து 18 நாள்களேயான பச்சிளம் பெண் குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அலங்காநல்லூா் அருகேயுள்ள புதுப்பட்டி கோட்டை முனியாண்டி கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் (34). இவரது மனைவி ராம சந்தியா (30). இவருக்கு கடந்த 8-ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தாயும், சேயும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இந்தக் குழந்தையை குளிப்பாட்டிய போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டதாம். இதையடுத்து, குழந்தையை அலங்காநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...