3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

மதுரையில் நக்கீரர் நினைவு வளைவை அகற்றியபோது விபத்து: ஒருவர் பலி

மதுரையில் நினைவு வளைவு விழுந்ததில் ஒருவர் பலியானது பற்றி...

நக்கீரர் நினைவு வளைவை அகற்றியபோது விபத்து

Published On :

மதுரையில் நக்கீரர் நினைவு வளைவை அகற்றியபோது ஏற்பட்ட விபத்தில் பொக்லைன் ஓட்டுநர் புதன்கிழமை நள்ளிரவு பலியானார்.

மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் வெளிபுறம் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் முன்பு, போக்குவரத்து நிறைந்த மேலூர் சாலையில் உலகத் தமிழ்ச் சங்க மாநாட்டின் போது, மதுரையில் அமைக்கப்பட்ட நக்கீரன் தோரணவாயில் அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு மேலூர் சாலை, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அகலப்படுத்தப்பட்டது. அப்போது இந்த தோரணவாயிலை இடிக்க, சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கும் தொடர்ந்தனர்.

ஆனால் போக்குவரத்து நெரிசலைக் கருதி அதனை இடிக்க, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, புதன்கிழமை நள்ளிரவு அதனை இடிக்கும் பணி தொடங்கியது.

இடிக்குபோது எதிர்பாராத விதமாக, தோரணவாயில் ஜேசிபி இயந்திரம் மேல் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், மதுரை சிந்தாமணியைச் சேர்ந்த ஜேசிபி ஆப்ரேட்டர் நாகலிங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார். ஒப்பந்ததாரர் நல்லதம்பி இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர், நாகலிங்கம் உடலை மீட்டு அமரர் ஊர்தி மூலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

இச்சம்பவம் மாட்டுத் தாவணி பேருந்து நிலைய பகுதியில் பரபரப்பையும், பயணிகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.