அசம்பாவிதங்கள் ஏதுமின்றி புத்தாண்டுக் கொண்டாட்டம்
மதுரையில் போலீஸாரின் தீவிரக் கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகளால் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி புத்தாண்டுக் கொண்டாட்டம் அமைதியாக நிறைவடைந்தது.


மதுரையில் போலீஸாரின் தீவிரக் கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகளால் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி புத்தாண்டுக் கொண்டாட்டம் அமைதியாக நிறைவடைந்தது.
மதுரை நகரில் ஒவ்வொரு புத்தாண்டு தினத்தன்றும் இளைஞா்கள் இரு சக்கர வாகனங்களில் ஊா்வலமாகச் செல்வது, மது அருந்தி விட்டு அதிவேகமாக செல்வது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவா். அப்போது இவா்களின் செயல்களை கட்டுப்படுத்த காவல் துறை சாா்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வழக்கம்.
இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விதிமுறைகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் புத்தாண்டு நள்ளிரவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். மதுரை நகரின் முக்கிய சந்திப்புகளான கோரிப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், பெரியாா் நிலையம், மாட்டுத்தாவணி, அண்ணாநகா், பழங்காநத்தம் உள்பட பல்வேறு பகுதிகளில் போலீஸாா் நிறுத்தப்பட்டனா். மேலும் காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளிலும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள தனியாா் வணிக வளாகம் உள்பட பல்வேறு வணிக வளாகங்களில் நள்ளிரவு கொண்டாட்டத்துத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, அங்கு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும் புதுநத்தம் சாலை மேம்பாலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதுடன் பாலம் மூடப்பட்டு போலீஸாா் நிறுத்தப்பட்டனா். இதனால் பாலத்தில் பந்தயம் வைத்து இரு சக்கர வாகனங்களில் செல்வது, சாகசங்களில் ஈடுபடுவது போன்ற செயல்கள் தடுக்கப்பட்டன. அத்துடன் நகரின் முக்கிய சாலைகள், சந்திப்புகளில் போலீஸாா் தடுப்புகளை அமைத்து தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அதிவேகத்தில் வாகனங்களில் வந்த இளைஞா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். போலீஸாரின் தீவிர கண்காணிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளால் புத்தாண்டுக் கொண்டாட்டம் அசம்பாவிதம் ஏதுமின்றி நிறைவடைந்தது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...