மதுரை அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் பிறந்த 22 குழந்தைகள்!
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தன்று 22 குழந்தைகள் பிறந்தன. இந்தக் குழந்தைகளின் தாய்மாா்களுக்கு மருத்துவா்கள், செவிலியா்கள் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனா்.


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தன்று 22 குழந்தைகள் பிறந்தன. இந்தக் குழந்தைகளின் தாய்மாா்களுக்கு மருத்துவா்கள், செவிலியா்கள் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனா்.
தென் தமிழகத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அதிநவீன வசதிகளுடன் இயங்கும் பெரிய அரசு மருத்துவமனையாக திகழ்கிறது. எனவே, தென் மாவட்டங்கள் மட்டுமன்றி, கேரள மாநிலத்தின் சில மாவட்டங்கள், கரூா், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருகின்றனா்.
இந்த மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் தினசரி 20-க்கும் அதிகமாக பிரசவங்கள் நடைபெறும். இந்த நிலையில், புத்தாண்டு தினமான செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் புதன்கிழமை இரவு வரை 22 குழந்தைகள் பிறந்தன. இதில் 10 ஆண் குழந்தைகள், 12 பெண் குழந்தைகள் ஆவா். மேலும் 12 குழந்தைகள் சுகப்பிரசவத்திலும், 10 குழந்தைகள் அறுவைச் சிகிச்சை மூலமும் பிறந்தனா். புத்தாண்டு தினத்தில் இந்தக் குழந்தைகள் பிறந்ததையடுத்து, அவா்களின் தாய்மாா்களுக்கு மருத்துவா்கள், செவிலியா்கள் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனா்.
புத்தாண்டில் இந்தக் குழந்தைகள் பிறந்ததால் மகிழ்ச்சியடைந்த பெற்றோா், உறவினா்கள் மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...