இணையவழி லாட்டரி சீட்டுகள் விற்பனை: மூவா் கைது
மதுரையில் இணைய வழியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்றதாக தலைமைக் காவலா் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :2 ஜனவரி 2025, 11:59 pm

மதுரையில் இணைய வழியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்றதாக தலைமைக் காவலா் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை தல்லாகுளம் பகுதியில் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, பீ.பீ.குளம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த பாலாஜியை (52) பிடித்து விசாரித்தனா்.
இதில் அவா் இணைய வழியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும் இவருக்கு கோ.புதூரைச் சோ்ந்த கனி, மதுரை 6-ஆவது சிறப்புக் காவல்படை தலைமைக் காவலா் பிரகாஷ் (38) ஆகியோா் உடைந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமைக்காவலா் உள்பட மூவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...