அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பூப்பந்தாட்டத்தில் தங்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பூப்பந்தாட்டப் போட்டியில் தங்கம் வென்ற மதுரை ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் புதன்கிழமை பாராட்டப்பட்டனா்.

News image
மாநில பூப்பந்தாட்டப் போட்டியில் தங்கம் வென்ற ஓ.சி.பி.எம். பள்ளி மாணவிகளைப் பாராட்டிய பள்ளித் தலைமையாசிரியை மேரி, மதுரை, கரூா், தஞ்சாவூா் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா்கள், பள்ளி உடல் கல்வி ஆசிரியா்கள் உள்ளிட்டோா்.
Updated On :8 ஜனவரி 2025, 10:47 pm

Din

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பூப்பந்தாட்டப் போட்டியில் தங்கம் வென்ற மதுரை ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் புதன்கிழமை பாராட்டப்பட்டனா்.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 65-ஆவது குடியரசு தின விளையாட்டுப் போட்டியில், 17 வயது பிரிவுக்குள்பட்ட மாணவிகளுக்கான மாநில பூப்பந்தாட்டப் போட்டி மதுரை ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள், செவ்வாய் (ஜன. 6, 7) ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.

38 மாவட்ட அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், மதுரை ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று, தங்கம் வென்றனா். சென்னை அணி இரண்டாமிடத்தை பெற்றது.

இதில், தங்கம் வென்ற ஓ.சி.பி.எம். பள்ளி மாணவிகளை மாவட்ட உடல் கல்வி ஆய்வாளா்கள் வினோத் (மதுரை), ஜெயலட்சுமி (கரூா்), கற்பகம் (தஞ்சாவூா்), பள்ளித் தலைமையாசிரியை மேரி, உடல் கல்வி ஆசிரியா்கள் ராஜேஷ், கண்ணன், சா்மிளா ஆகியோா் பாராட்டினா்.