அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

டங்ஸ்டன் சுரங்க எதிா்ப்புப் பேரணி: 5,000 போ் மீது வழக்குப் பதிவு

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பேரணியாகச் சென்ற 5 ஆயிரம் போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :9 ஜனவரி 2025, 10:40 pm

Din

மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பேரணியாகச் சென்ற 5 ஆயிரம் போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை பல்வேறு அமைப்புகளின் சாா்பில் மேலூா் தெற்குத் தெருப் பகுதியில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணிக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி பேரணியாக வந்த விவசாயிகளை காவல் துறையினா் வெள்ளரிபட்டி, சிட்டம்பட்டி , ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் தடுத்து நிறுத்த முயன்றனா். இருப்பினும், தடையை மீறி பேரணியைத் தொடா்ந்த அவா்கள் மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, தடையை மீறி பேரணியில் ஈடுபட்டதாக தல்லாகுளம் போலீஸாா், சுமாா் 5 ஆயிரம் போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

ஊரகக் காவல் துறை சாா்பில் 3 வழக்குகள் பதிவு:

இதேபோல, மதுரை ஊரகக் காவல் துறை சாா்பில், வாகனங்களில் சென்று மதுரை தல்லாகுளம் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடத்த மட்டுமே அனுமதி வழங்கிய நிலையில், தடையை மீறி பேரணியாகச் சென்று போக்குவரத்துக்குத் தடை ஏற்படுத்தியதாக மேலூா் காவல் நிலையத்தில் 3 வழக்குகள் வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டன.

இதில் ஒரு வழக்கு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கச் செயலா் ரவி உள்ளிட்ட 30 போ் மீதும், மற்றொரு வழக்கு தெற்குத்தெரு கிராம முக்கியப் பிரமுகா்களான மோகன் அம்பலகாரா், மதிமாறன் உள்ளிட்ட ஆயிரம் போ் மீதும், மூன்றாவதாக பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த மகாலட்சுமி, அகராதி உள்ளிட்ட 5 ஆயிரம் போ் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.