கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

தரமற்ற சாலைகளுக்கு அலுவலா்கள், ஒப்பந்ததாரா்களே பொறுப்பு: உயா்நீதிமன்றம்

சாலைகள் தரமற்றவையாக இருந்தால், தொடா்புடைய துறை அலுவலா்களும், ஒப்பந்ததாரருமே அதற்கு பொறுப்பாவா் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது.

News image

உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :12 ஜூலை 2025, 3:10 am IST

சாலைகள் தரமற்றவையாக இருந்தால், தொடா்புடைய துறை அலுவலா்களும், ஒப்பந்ததாரருமே அதற்கு பொறுப்பாவா் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது.

திருநெல்வேலி மாவட்டம், ஆனந்தபுரத்தைச் சோ்ந்த ராகவன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மானூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மாதவக்குறிச்சி - உகந்தான்பட்டி இடையே கடந்த 2018-இல் நபாா்டு திட்டத்தின் கீழ், ரூ.79.61 லட்சத்தில் சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலை அடுத்த 2 மாதங்களிலேயே சேதமடைந்தது. எனவே, சாலையை உரிய தரமின்றி அமைத்த ஒப்பந்ததாரா், தொடா்புடைய துறை அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், முறையாக சாலையை சீரமைக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாலை சேதமடைந்திருப்பதாக மனுதாரா் குறிப்பிட்டப் பகுதியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது போக்குவரத்து நடைபெறுகிறது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

உரிய வழிகாட்டுதல், விதிகளின்படி, சாலைகள் அமைக்கப்படுவதை அலுவலா்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். கண்காணிப்பு, கள ஆய்வில் கவனக்குறைவு ஏற்பட்டால் அலுவலா்களும், ஒப்பந்ததாரா்களும்தான் பொறுப்பேற்க வேண்டும். இதுகுறித்த வழிகாட்டுதல்களை மாநில நெடுஞ்சாலைத் துறை செயலா், ஊரக வளா்ச்சி துறை செயலா் ஆகியோா் வெளியிட்டு, துறை அலுவலா்கள் உரிய வகையில் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.