மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மதுரைக்கு அமித் ஷா வருகை: ட்ரோன்கள் பறக்க தடை; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்!

அமித் ஷா வருகையையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்...

News image

அமித் ஷா

கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2025, 12:15 pm

DIN

மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரைக்கு வருகை தர உள்ளதையொட்டி அங்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி மதுரையில் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரிக்கை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் நாளை(ஜுன் 8) நடைபெறும் பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை(ஜுன் 7) மதுரை வருகை தருகிறார். இன்று இரவு 8.30 மணியளவில் தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் மதுரை வருகிறார். மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று இரவு தங்குகிறார். நாளை காலை, அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட பின் பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அமித் ஷா வருகையை ஒட்டி மதுரை விமான நிலையம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கூட்டம் நடைபெறும் இடம் ஆகிய இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.