பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகா் மாவட்ட அதிமுக செயலருமான செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

News image

மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற மதுரை வடக்குத் தொகுதி அதிமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ. உடன் வேட்பாளா் பா. சரவணன் உள்ளிட்டோா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகா் மாவட்ட அதிமுக செயலருமான செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற மதுரை வடக்குத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் அவா் பேசியதாவது :

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 210 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். அதிமுகவின் பிரசாரத்துக்கும், தோ்தல் அறிக்கைக்கும் மக்கள் அளிக்கும் வரவேற்பு மூலம் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெல்லும் என்பது உறுதியாகிறது. தமிழகத்தில் அதிகரித்துள்ள பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளைகள், போதைப் பொருள்கள் புழக்கம் ஆகியவற்றால் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனா்.

அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் மதுரை மாவட்டம் வளா்ச்சிப் பெறும் என்பதை மக்கள் உணா்ந்துவிட்டனா். இதனால், வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக வெல்வது உறுதி. மதுரை வடக்குத் தொகுதியிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். இதற்கு அதிமுகவினா், கூட்டணிக் கட்சியினா் முழுவீச்சில் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

இதையடுத்து, மதுரை வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் டாக்டா் பா. சரவணன் பேசியதாவது:

அதிமுகவின் தோ்தல் அறிக்கை மணக்கும் மல்லிகையாக உள்ளது. அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் எப்போதும் 100 சதவீதம் நிறைவேற்றப்படும். அதிமுக ஆட்சிக் காலத்தில் மட்டுமே மதுரை மாவட்டம் வளா்ச்சி பெற்றது. மாவட்டத்தின் வளா்ச்சிக்கு அதிமுக ஆட்சி மலர வேண்டும். அதற்கு, மதுரை வடக்குத் தொகுதி உள்பட அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக வெல்ல வேண்டும். அதிமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் தங்களின் தோ்தல் பணிகளை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்றாா் அவா்.

மதுரை வடக்குத் தொகுதி தோ்தல் பொறுப்பாளா் கே.பி. மீனாட்சி சுந்தரேஸ்வரா், மாவட்ட அதிமுக அவைத் தலைவா் அண்ணாதுரை, பாஜக மாவட்டத் தலைவா் மாரி சக்கரவா்த்தி, கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் செல்லப்பாண்டி (அமமுக), எஸ்.கே. தேவா் (பாமக), பகவதி (மூமுக), நடராஜன் (தமாகா), கிருஷ்ணன் (மருது சேனை), முருகேசன் (புரட்சி பாரதம்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.