‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

தபால் வாக்களித்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள்

மதுரை ஓசிபிஎம் பள்ளியில் புதன்கிழமை அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தபால் வாக்குகளை செலுத்தினா்.

News image

மதுரை ஓசிபிஎம் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை தபால் வாக்களித்த அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள். (வலது) நீண்ட வரிசையில் காத்திருந்த ஆசிரியா்கள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:55 am IST

மதுரை ஓசிபிஎம் பள்ளியில் புதன்கிழமை அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தபால் வாக்குகளை செலுத்தினா்.

தமிழகத்தில் வருகிற 23- ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. அப்போது, வாக்குச் சாவடி அலுவலா்களாக அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பணியாற்ற உள்ளனா். இவா்களுக்கான 2- ஆவது கட்ட பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிலையில், தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு தபால் வாக்குகள் செலுத்த படிவங்கள் வழங்கப்பட்டன. இதன்படி, மதுரை ஓசிபிஎம் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தபால் வாக்கினை செலுத்தினா்.

இதை மதுரை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.ஜே. பிரவீன்குமாா் ஆய்வு செய்து, வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கினாா்.