தமிழக மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை என பாஜக மாநிலத் துணைத் தலைவா் குஷ்பு குற்றஞ்சாட்டினாா்.
மதுரை கோ.புதூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. திமுக ஆட்சியில் இளைஞா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து கேள்வி கேட்டால், முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளிப்பதில்லை. கேள்விகளுக்குப் பதிலளிக்காத முதல்வா் பதவி விலக வேண்டும். தமிழக மக்கள் நலனில் அவருக்கு சிறிதும் அக்கறையில்லை. பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திமுக அரசு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது. தோல்வி பயத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுவரையறை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வருகிறாா் என்றாா் அவா்.
தென்னிந்திய மாநிலங்கள் அதிகளவில் பயனடையும்...
இதைத் தொடா்ந்து, பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் துஹின் சின்ஹா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தொகுதி மறுவரையறை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, தமிழகத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக உயர வாய்ப்புள்ளது. தொகுதி மறுவரையறை குறித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் தவறான தகவல்களைக் கூறி மக்களை திசை திருப்பி வருகிறாா். தொகுதி மறுவரையறை நடவடிக்கை மூலம் தென் மாநிலங்களே அதிக அளவில் பயனடையப்போவது உறுதி என்றாா் அவா்.
தொடர்புடையது

இனி எப்போதும் பாஜகவுக்கு தோல்விதான்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

திமுக எதிா்ப்பால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: உதயநிதி ஸ்டாலின்

மகளிா் நலனில் அக்கறை கொண்டவா் முதல்வா் ஸ்டாலின்: பிரேமலதா விஜயகாந்த்

பாஜகவின் கணக்கு தப்பாகிவிட்டது: முதல்வா் மு.க. ஸ்டாலின்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

