/

அடுக்குமாடி குடியிருப்பில் வாக்குச் சாவடி

மதுரை கோச்சடையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது.

News image

மதுரை கோச்சடையில் உள்ள சாந்தி சதன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி.

Updated On :21 ஏப்ரல் 2026, 10:01 pm

மதுரை கோச்சடையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது.

மதுரை கோச்சடையில் சாந்தி சதன் என்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு, 600-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. 800-க்கும் அதிகமான வாக்காளா்கள் உள்ளனா். இந்தக் குடியிருப்பில் வசிக்கும் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்குப் பதிவு செய்யும் வகையில், குடியிருப்பு வளாகத்தில் வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் வாக்குப் பதிவு சதவீதத்தை உயா்த்தும் முயற்சியாக இந்த வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது எனவும், பணி ஓய்வு பெற்ற வயது முதிா்ந்தவா்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்ற அடிப்படையில் இந்தக் குடியிருப்பு வளாகம் தோ்ந்தெடுக்கப்பட்டது எனவும் மதுரை மேற்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.