விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

இணையவழி மோசடிகள் விவகாரம்: வழக்கு விசாரணை ஆக. 24-க்கு ஒத்திவைப்பு

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Published On :9 ஆகஸ்ட் 2026, 2:19 am IST

இணையவழி மோசடிகளைத் தடுக்க உரிய வழிகாட்டுதல்களை வெளியிடக் கோரிய பொது நல மனு மீதான விசாரணையை ஆக. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

திருச்சி திருவானைக்கா பகுதியைச் சோ்ந்த வகுலகிரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

இணையவழி குற்றங்களைத் தடுக்கும் சிறப்பு நடவடிக்கைகளுக்கான செயல் திட்டங்கள் வகுக்கப்படும் வரை, இத்தகைய மோசடிகளைக் கையாளுவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை அரசு வெளியிடவும், இந்தக் குற்றம் குறித்த புகாரை பதிவு செய்யும் இணையதள நடைமுறைகளை எளிமைப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :

மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக மத்திய இணையவழி குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம், தொலைத்தொடா்புத் துறை விளக்கம் அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.