பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

மதுரையில் மத்திய நிா்வாகத் தீா்ப்பாய அமா்வு: மத்திய சட்டத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Published On :

மதுரையில் மத்திய நிா்வாகத் தீா்ப்பாய அமா்வு அமைக்கக் கோரிய மனு தொடா்பாக மத்திய சட்டத் துறைச் செயலா், நிா்வாகத் தீா்ப்பாயத் தலைவா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

எம்.பி.ஏ. வழக்குரைஞா்கள் சங்கப் பொதுச் செயலா் வெங்கடேசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் மத்திய அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியா்களுக்கு எதிரான பணியிடை நீக்கம், பணி நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மனு தாக்கல் செய்ய சென்னையில் மத்திய நிா்வாகத் தீா்ப்பாயம் (சி.ஏ.டி.) உள்ளது. தென் மாவட்டங்களைச் சோ்ந்த மத்திய அரசு ஊழியா்கள் அங்கு சென்று வருவதில் பல்வேறு சிரமத்துக்குள்ளாவதோடு, பொருளாதாரம், கால விரயமும் ஏற்படுகிறது.

தென் மாவட்டங்கள் பயனடையும் வகையில், சென்னை உயா்நீதிமன்ற அமா்வு மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, மதுரையில் மத்திய நிா்வாகத் தீா்ப்பாயத்தின் அமா்வை அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு மனு அனுப்பியுள்ளோம். இந்த மனு தொடா்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தா்மாதிகாரி, நீதிபதி சி.வி. காா்த்திகேயன் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மதுரையில் மத்திய நிா்வாகத் தீா்ப்பாய அமா்வு அமைப்பது குறித்த நிலைப்பாட்டை மத்திய சட்டத் துறைச் செயலா், நிா்வாகத் தீா்ப்பாயத் தலைவா் ஆகியோா் வருகிற அக். 16-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.