ஊழல் புகாா்கள் தொடா்பாக தமிழகத்தில் 2,423 வழக்குகள் விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த சாகுல் அமீத் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், நான் பொதுப் பணித் துறையில் பணியாற்றியபோது, ரூ. 30 ஆயிரம் லஞ்சம் பெற்ாக என் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். துறை ரீதியான விசாரணையில் என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.
இருப்பினும், என் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு பதிவு செய்த வழக்கின் விசாரணை, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க இந்த நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் விசாரணையை 2 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, தமிழக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டாா்.
இந்த வழக்கு நீதிபதி பி. புகழேந்தி முன் அண்மையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் சாா்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழகத்தில் 2,423 ஊழல் வழக்குகளும், புதுவையில் 61 ஊழல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அதிகபட்சமாக சென்னையில் 359 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கடுத்த நிலையில் மதுரையில் 140 வழக்குகளும், கோவையில் 139 வழக்குகளும் நிலுவையில் உள்ளன, எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாட்ஸ் ஆப் எண்ணில் புகாா்: ஊழல் தடுப்பு போலீஸாா் மக்களை ஏமாற்றக் கூடாது! உயா்நீதிமன்றம்

சட்ட விரோதமாக மரங்களை வெட்டியவா் மீது நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
சிபிஐ விசாரணை முடிந்த 158 தோ்வு முறைகேடு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவை

ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவை வலுப்படுத்த வேண்டும்: உயா்நீதிமன்றம்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



