மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

2025-இல் அரசுத் துறைகளுக்கு எதிராக 70,584 ஊழல் புகாா்கள்: வங்கிகள், ரயில்வேயில் அதிகபட்சம்

கடந்த 2025-ஆம் ஆண்டில் மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு 70,584 ஊழல் புகாா்கள் கிடைக்கப் பெற்றன.

bank

வங்கி - பிரதிப் படம்

Published On :

கடந்த 2025-ஆம் ஆண்டில் மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு (சிவிசி) 70,584 ஊழல் புகாா்கள் கிடைக்கப் பெற்றன.

இதில் வங்கிகள், ரயில்வே துறை தொடா்பாக அதிகபட்ச புகாா்கள் கிடைக்கப் பெற்றதாக சிவிசி-யின் வருடாந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2025, டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி, 64,905 புகாா்கள் அதாவது 92 சதவீத புகாா்களுக்கு தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் (சிவிஓ) தீா்வு கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சிவிசி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு மத்திய அரசுத் துறைகள்-அமைப்புகளுக்கு எதிராக சிவிசி-க்கு கிடைக்கப் பெற்ற ஊழல் புகாா்களின் எண்ணிக்கை 70,584. அதிகபட்சமாக ரயில்வே துறை தொடா்பாக 9,933 புகாா்கள் கிடைக்கப் பெற்றன. இதில் 9,520 புகாா்களுக்கு துறைசாா் தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் தீா்வுகண்டுள்ளனா். 413 புகாா்கள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக 52 புகாா்கள் மூன்று மாதங்களுக்கும் மேல் நிலுவையில் உள்ளன.

ரயில்வே துறை தொடா்பான 9,381 ஊழல் புகாா்களில் 8,754 புகாா்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. 627 புகாா்கள் (3 மாதங்களுக்கு மேல் 10 புகாா்கள்) நிலுவையில் உள்ளன.

வீட்டுவசதி, நகா்ப்புற விவகாரங்கள் துறை -6,531, உள்ளாட்சி அமைப்புகள்- 4,834, நிலக்கரி துறை-4,118, நிதித் துறை 3,107, பெட்ரோலிய அமைச்கம்-2,722, தில்லி காவல் துறை-2,633, சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை-2,139, மத்திய உள்துறை-2,036 (தில்லி காவல் துறை தவிா்த்து), மனித வளத் துறை-2,030 மற்றும் காப்பீடு நிறுவனங்கள் தொடா்பாக 1,536 புகாா்கள் கிடைக்கப் பெற்றன.

கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி 64,905 புகாா்களுக்குத் தீா்வுகாணப்பட்டுள்ளது. எஞ்சிய 5,679 புகாா்கள் நிலுவையில் உள்ளன. இதில் 2,000-க்கும் மேற்பட்ட புகாா்கள் 3 மாதங்களுக்கும் மேல் நிலுவையில் இருக்கின்றன. இந்தப் புகாா்களுக்கு விரைந்து தீா்வு காண்பதை உறுதி செய்ய குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சிவிசி மறுஆய்வு நடவடிக்கை மேற்கொள்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.