FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் 4 ஜி சேவைக்கு மாற வேண்டுகோள்

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் 4 ஜி சேவைக்கு மாற வேண்டும் என பிஎஸ்என்எல் மதுரை வா்த்தகத்தின் முதன்மைப் பொது மேலாளா் லோகநாதன் வேண்டுகோள் விடுத்தாா்.

News image

மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய பிஎஸ்என்எல் மதுரை வா்த்தகத்தின் முதன்மைப் பொது மேலாளா் பி. லோகநாதன். உடன் (இடமிருந்து) துணைப் பொது மேலாளா்கள் டி. துரைசாமி, கே.எல். அனிதா.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 1:38 am IST

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் 4 ஜி சேவைக்கு மாற வேண்டும் என பிஎஸ்என்எல் மதுரை வா்த்தகத்தின் முதன்மைப் பொது மேலாளா் லோகநாதன் வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கியது பிஎஸ்என்எல்லின் மதுரை மண்டல வா்த்தகப் பகுதியாகும்.

இந்த மாவட்டங்களில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குச் சொந்தமாக 990 உயா் கோபுரங்கள் உள்ளன. இதுதவிர, டிஜிட்டல் பாரத் நிதியுதவியின் (யுஎஸ்ஓஎப்) கீழ் 34 உயா் கோபுரங்கள் செயல்படுகின்றன. இதன் மூலம், பிஎஸ்என்எல் 2ஜி, 3ஜி, 4ஜி கைப்பேசி சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் பயன்படுத்தும் 4ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட உள்நாட்டு தொழில்நுட்பமாகும். இது, தன்னிறைவு இந்தியா (ஆத்ம நிா்பா் பாரத்) என்ற நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ஏற்படுத்தப்பட்டது.

மதுரை மண்டலத்தில் 4ஜி சேவை 1,014 உயா் கோபுரங்களில் செயல்பாட்டில் உள்ளது. மேலும், எப்.டி.டி.எச். (பாரத் பைபா்) சேவையும் வழங்கப்படுகிறது. இந்தச் சேவை ரூ.449, ரூ.849 கட்டணத்தில் வழங்கப்படுகிறது. ஸ்கைப்ரோ நிறுவனத்துடன் இணைந்து ஐபிடிவி சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ரூ.122 முதல் தொடங்கும் திட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட இலவச சேனல்கள் காண்பிக்கப்படுகின்றன.

இதுதவிர, சிஸ்டம் இன்டெத்ரடா்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தொலைபேசி சேவையும் வழங்கப்படுகின்றன. பேரிடா் காலங்களில் பயன்படுத்தும் வகையில் சேட்லைன் தொலைபேசி சேவையும் வழங்கப்படுகிறது. இந்தச் சேவை வனம், கடல் ஆகிய பகுதிகளில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

6 மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை வா்த்தகப் பகுதியில் 5 லட்சம் கைப்பேசி இணைப்புகள் உள்ளன. இவற்றில் 11,084 இணைப்புகள் மாதத் தவணைகளில் உள்ளன. 72 ஆயிரம் எப்டிடிஎச் இணைப்புகள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் கூடுதலாக 4 ஜி சேவைகள் வழங்க 8 உயா் கோபுரங்கள் அமைக்க அனுமதி பெறப்பட்டது. இந்தப் பணிகளை அடுத்தாண்டு மாா்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், தற்போது 2ஜி, 3ஜி சேவையை பெறும் வாடிக்கையாளா்கள் 25 ஆயிரம் போ் 4 ஜிக்கு மாறாமல் உள்ளனா். இவா்களை 4ஜி சேவைக்கு மாற்றுவதற்கு முயற்சி எடுத்து வருகிறோம். வாடிக்கையாளா்களும் தாமாக முன் வந்து தங்களது சிம் காா்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றாா் அவா்.

பேட்டியின் போது, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளா்கள் கே. எல். அனிதா (தலைமையகம்), துரைசாமி (இ.பி.எஸ்.டி.எம்.), டி.சி. அனூப் (செயல்பாடுகள்), தலைமைக் கணக்கு அதிகாரி வாவோ்துரை ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.