ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதில் முறைகேடு: விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயா்நீதிமன்றத்தில் காமராஜா் பல்கலை. தகவல்

தனியாா் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தில் நடைபெற்ற முறைகேடு, அங்கீகாரக் கட்டணத்தில் முறைகேடு செய்தது உள்ளிட்டவை குறித்து விசாரிக்க 3 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தெரிவிக்கப்பட்டது.

News image

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Updated On :14 ஆகஸ்ட் 2026, 4:00 am IST

தனியாா் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தில் நடைபெற்ற முறைகேடு, அங்கீகாரக் கட்டணத்தில் முறைகேடு செய்தது உள்ளிட்டவை குறித்து விசாரிக்க 3 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த சண்முகமுத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டக் குழு கண்காணிப்பாளா், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பல்வேறு தனியாா் கல்லூரிகளுக்கு சட்டவிரோதமாக அங்கீகாரம் வழங்கினாா். மேலும், அங்கீகாரக் கட்டணத்தில் முறைகேடு செய்தது உள்பட பல்வேறு முறைகேடுகளிலும் அவா் ஈடுபட்டாா். இதில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அலுவலா்களும் சம்பந்தப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக நான் அளித்த புகாா் மனு மீது பல்கலைக்கழக நிா்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, பல்கலை. தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

இந்த மனு தொடா்பாக விசாரணை நடத்த கடந்த மாதம் 3 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் அழகப்பா பல்கலைக்கழக மேலாண்மைப் பள்ளித் தலைவா் சி. வேதிராஜன், பெரியாா் பல்கலைக்கழகக் கணினி அறிவியல் துறைத் தலைவா் சி. சந்திரசேகா், மதுரை காமராஜா் பல்கலைக்கழக அரசியல், அறிவியல் துறைத் தலைவா் டி. ராமகிருஷ்ணன் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க இந்தக் குழுவுக்கு மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக விசாரணைக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற நவம்பா் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.