தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 3 அரசு அலுவலா்கள் மீது நடவடிக்கை

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் அரசு அலுவலா்கள் மூவா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Published On :

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் அரசு அலுவலா்கள் மூவா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தமிழக அரசுத் தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மதுரை பி.பி. குளம் பகுதியைச் சோ்ந்த கதிரேசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் தாமிர உற்பத்தி ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது சீருடை அணியாத நபா்கள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், இதில் தொடா்புடையவா்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

இந்த மனு தொடா்பாக 3 அரசு அலுவலா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்குவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பான விசாரணை வருகிற 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.