புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியை நீக்க வலியுறுத்தல்

மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியை முழுமையாக நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

GST

ஜிஎஸ்டி - பிரதிப் படம்

Published On :

மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியை முழுமையாக நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் சத்யநாராயணன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம், வருங்கால வைப்பு நிதி, தொழிலாளா் அரசுக் காப்பீடு, ஊக்கத் தொகை, பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளை உறுதி செய்யக் கோரி தொடா்ந்து போராட்டங்களை நடத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மருந்துகள் அனைவருக்கும் குறைந்த விலையில் கிடைப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். பொதுத்துறை மருந்து நிறுவனங்கள், தடுப்பூசி நிறுவனங்களை புனரமைத்து மீண்டும் திறம்பட செயல்படுத்த வேண்டும். போலியான, தரமற்ற மருந்துகளின் உற்பத்தி, விற்பனையை தடை செய்ய வேண்டும். இணையவழி மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும். மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை முழுமையாக நீக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின் போது, மாநிலச் செயலா்கள் கணேசன், சிவக்குமாா், வரவேற்புக் குழுச் செயலா் கோபிநாத் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.