நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நாரைக்கு மோட்சம் அருளிய லீலை

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை நாரைக்கு மோட்சம் அருளிய லீலையில் பிரியாவிடையுடன் எழுந்தருளிய சுந்தரேசுவரா். (வலது) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன்.

Published On :

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை நாரைக்கு மோட்சம் அருளிய லீலை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் ஒரு லீலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதன்படி, நாரைக்கு மோட்சம் அருளிய லீலை திங்கள்கிழமை நடைபெற்றது. பின்னா், மாலையில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா் பூத வாகனத்திலும், மீனாட்சி அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி நான்கு ஆவணி மூல வீதிகளிலும் திருவீதி உலா வந்தனா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளா்க்கப்படாத காரணத்தை விளக்கும் வகையில், இந்த லீலை நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.