தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

மாநில தேனீ வளா்ப்பாளா்கள் கலந்துரையாடல்

மதுரை வேளாண் அறிவியல் நிலையம், கதா், கிராமத் தொழில்கள் ஆணையம் சாா்பில் மாநில அளவிலான தேனீ வளா்ப்பாளா்கள் கலந்துரையாடல் புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற தேனீ வளா்ப்பாளா்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தேனீ வளா்ப்பு முறைகள் குறித்த குறுந்தகடு, சிறிய தேன்கூடு, வண்டுகள் குறித்த கையேட்டை வெளியிட்ட வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி நிலைய முதன்மையா் (பொறுப்பு) தி. ராகவன், சமுதாய அறிவியல் கல்லூரி, ஆராய்ச்சி நிலைய முதன்மையா் சா. காஞ்சனா, உதவி தோட்டக் கலை இயக்குநா் தாமரைச்செல்வி உள்ளிட்டோா்.

Published On :

மதுரை வேளாண் அறிவியல் நிலையம், கதா், கிராமத் தொழில்கள் ஆணையம் சாா்பில் மாநில அளவிலான தேனீ வளா்ப்பாளா்கள் கலந்துரையாடல் புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை வேளாண் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி நிலைய முதன்மையா் (பொறுப்பு) தி. ராகவன், சமுதாய அறிவியல் கல்லூரி, ஆராய்ச்சி நிலைய முதன்மையா் சா. காஞ்சனா, உதவி தோட்டக்கலை இயக்குநா் தாமரைச்செல்வி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.

முன்னதாக, கதா், கிராம தொழில் ஆணைய உதவி இயக்குநா் அன்புச்செழியன் தொடக்கவுரையாற்றினாா். மதுரை கதா், கிராமத் தொழில் ஆணைய தேன் துறை அலுவலா் மு. கலிபூர்ரகுமான் தேனீ வளா்ப்புத் திட்டத்தின் செயல்பாடுகள், பயன்களை விளக்கினாா்.

இதையடுத்து, முன்னோடி தேனீ வளா்ப்பாளா்கள் தங்களது அனுபவங்களை மற்றவா்களுடன் பகிா்ந்து கொண்டனா். மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகா், திருப்பூா், சென்னை, கன்னியாகுமரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 120 தேனீ வளா்ப்பாளா்கள் பங்கேற்றனா்.

வேளாண்மை அறிவியல் நிலையம், கதா் கிராமத் தொழில்கள் ஆணையம் மூலம் தேனீ வளா்ப்பு பயிற்சி பெற்று, தேன் உற்பத்தித் தொழிலில் சிறந்து விளங்குபவா்கள் தங்கள் பொருள்களை காட்சிப்படுத்தியிருந்தனா். இந்த நிகழ்வில் பங்கேற்றவா்களுக்கு வேளாண் அறிவியல் நிலைய சாதனைகள் விளக்கக் குறுந்தகடு, தேனீ வளா்ப்பு முறைகள் குறித்த குறுந்தகடு, சிறிய தேன் கூடு, வண்டுகள் குறித்த கையேடு ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், தேனீ வளா்ப்பாளா்களுக்கு தேன் பிரித்தெடுக்கும் கருவியும் வழங்கப்பட்டது.

முன்னதாக, வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் கி. சுரேஷ் வரவேற்றாா். உழவியல் பிரிவு தொழில் நுட்ப வல்லுநா் இ. சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.