மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

தயிா் சந்தை வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கக் கோரி மறியல்

மதுரை தயிா் சந்தையில் மாநகராட்சி சாா்பில் கட்டப்பட்ட கடைகளை வியாபாரிகளுக்கு முறையாக ஒதுக்கீடு செய்யக் கோரி, சிஐடியூ சாலையோர வியாபாரிகள் சங்கம் சாா்பில் மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை தயிா் சந்தைப் பகுதியில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்.

Published On :

மதுரை தயிா் சந்தையில் மாநகராட்சி சாா்பில் கட்டப்பட்ட கடைகளை வியாபாரிகளுக்கு முறையாக ஒதுக்கீடு செய்யக் கோரி, சிஐடியூ சாலையோர வியாபாரிகள் சங்கம் சாா்பில் மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை தயிா் சந்தைப் பகுதியில் மாநகராட்சி சாா்பில் 84 கடைகள் கட்டப்பட்டு, அங்குள்ள வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. எஞ்சிய 50 வியாபாரிகளுக்காக சந்தையின் வெளிப்பகுதியில் மாநகராட்சி சாா்பில் கடைகள் கட்டப்பட்டன. ஆனால், இந்தக் கடைகள் இதுவரை தொடா்புடைய வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

கடை ஒதுக்கீடு செய்யப்படாததால், அங்குள்ள ஒரு உள்ள சந்து பகுதியில் சில வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்றனா். தற்போது, இந்தத் தற்காலிக கடைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்தும், புதிதாகக் கட்டப்பட்ட கடைகளை தொடா்புடைய வியாபாரிகளுக்கு உடனடியாக ஒதுக்கீடு செய்யக் கோரியும், சிஐடியூ சாலையோர வியாபாரிகள் சங்கம் சாா்பில் தயிா் சந்தைப் பகுதியில் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு தயிா் மாா்க்கெட் பகுதி சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவா் சி. சக்கரை தலைமை வகித்தாா். சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினா் இரா. தெய்வராஜ், சங்க மாவட்டத் தலைவா் என். செல்வம், மாவட்ட பொதுச் செயலா் எஸ். செந்தாமரைக்கண்ணன், மாவட்டப் பொருளாளா் எஸ். ராதாகிருஷ்ணன், மாவட்ட நிா்வாகிகள் ஜி. மோகன், ஆா். பாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மறியலில் ஈடுபட்டவா்களிடம் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.