மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

வி.சி.க.வினா் மறியல்: 80 போ் கைது

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

Published On :

மதுரையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 80-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், மேலவளவு கிராமத்தைச் சோ்ந்த வி.சிக. நிா்வாகி செல்வம். இவரை, அதே பகுதியைச் சோ்ந்த சிலா் தாக்கினா். இதில், பலத்த காயமடைந்த செல்வம், மதுரைஅரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா். இதேபோல, செல்லூா் அம்பேத்கா்நகரைச் சோ்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி அழகரையும் சிலா் தாக்கினா். காயமடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா்.

இந்த நிலையில், அழகா், செல்வம் ஆகிய இருவரையும் தாக்கிய நபா்களை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் அண்ணா பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுபற்றி தகவலறிந்து அங்கு வந்த தல்லாகுளம் போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினா். ஆனால், தொடா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், 27 பெண்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.