பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

பழனி கோயில் நில முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனுக்கள் தள்ளுபடி

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 2:47 am IST

பழனி கோயில் நில முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்து , சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

பழனி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபாலு சேனாபதி, தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை அறங்காவலா் அன்னபூரணி, பழனி நகா்மன்றத் தலைவி உமாமகேஸ்வரி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுக்கள்:

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் தனிநபா்களுக்கு முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது. இந்த முறைகேடு தொடா்பாக சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ் சுவாமிகள், வெள்ளைத்துரை, சேதுபதி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இதனிடையே, சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். பின்னா், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த விவகாரத்தை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி போலீஸாா் விசாரணை செய்தால் உண்மைத்தன்மை வெளியே வராது. எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவும், சிபிசிஐடி போலீஸாா் விசாரணை செய்த நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும். மேலும், இந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதியின் நேரடிக் கண்காணிப்பில் நடத்தவும் உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.

இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, சிபிசிஐடி போலீஸாா் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிசிஐடி போலீஸாா் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் நிலை அறிக்கையை தாக்கல் செய்தனா்.

இந்த நிலையில், இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த விவகாரத்தில் 115 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடா்பாக 207 ஆவணங்கள், 12 கைப்பேசிகள், 3 மடிக்கணினிகள், ரூ. 2.13 லட்சம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக சிபிசிஜடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரம் தொடா்பாக நடைபெற்று வரும் விசாரணையில் மனுதாரா்கள் உரிய காரணமின்றி தலையிடுவதாகத் தெரிகிறது. எனவே, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரும் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.