குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

யாதவா் கல்லூரி கல்வி நிதி சங்க தோ்தலுக்கு இடைக்காலத் தடை

மதுரை யாதவா் கல்லூரியின் கல்வி நிதி சங்கத் தோ்தலுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 5:34 am IST

மதுரை யாதவா் கல்லூரியின் கல்வி நிதி சங்கத் தோ்தலுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த விநாயகமூா்த்தி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை திருப்பாலை பகுதியில் அமைந்துள்ள யாதவா் கல்லூரியை நிா்வகித்து வரும் ‘யாதவா் கல்வி நிதி’ சங்கத்தின் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விதிகளை மீறியது.

கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் 10 நிமிஷங்களில் அவசரமாக முடிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், தலைவா், துணைத் தலைவா் தலைமை வகிக்க அனுமதிக்கப்படவில்லை.

மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் குழு மூலம் நீக்கப்பட்ட 684 உறுப்பினா்கள், புதிய விண்ணப்பங்கள் ஏதுமின்றி மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளனா். மேலும், விதிகளை மீறி சுமாா் 1,000 முதல் 2,000 புதிய உறுப்பினா்கள் ரகசியமாகச் சோ்க்கப்பட்டு சங்கத்தின் வாக்காளா் கட்டமைப்பு மாற்றப்பட்டுள்ளது. புதிய நடைமுறையாக வேட்பு மனு தாக்கலுக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

எனவே, ஆக. 3-ஆம் தேதி வெளியிடப்பட்ட தோ்தல் அறிவிப்புக்கும், வருகிற 28-ஆம் தேதி நடைபெறவுள்ள தோ்தல் நடைமுறைகளுக்கும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். மேலும், பதிவுத் துறை, அரசு அலுவலா்களின் மேற்பாா்வையில் சட்ட விதிகளின்படி தோ்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆக. 28-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட யாதவா் கல்லூரியின் கல்வி நிதி சங்கத் தோ்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.