குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

மது போதையில் தகராறு செய்த மகனைக் கொன்று புதைத்த தாய்: போலீஸ் விசாரணை

மதுரையை அடுத்த கருப்பாயூரணி அருகே மது போதையில் தகராறு செய்த மகனை கம்பியால் தாக்கி தாய் கொலை செய்து புதைத்தது 3 மாதங்களுக்குப் பிறகு போலீஸாரால் கண்டறியப்பட்டது.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 5:35 am IST

மதுரையை அடுத்த கருப்பாயூரணி அருகே மது போதையில் தகராறு செய்த மகனை கம்பியால் தாக்கி தாய் கொலை செய்து புதைத்தது 3 மாதங்களுக்குப் பிறகு போலீஸாரால் கண்டறியப்பட்டது.

கருப்பாயூரணி வரிச்சியூா் மேட்டுப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மனைவி அய்யம்மாள் (50). இவரது மகன் ராஜா (எ) மேட்டுப்பட்டி ராஜா (30). கணேசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதனால், அய்யம்மாள் தனது மகன் ராஜாவுடன் வசித்து வந்தாா். இதனிடையே, ராஜாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அவரது மனைவி பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக ராஜா வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வந்து தாயிடம் தகராறு செய்தாா். இந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக ராஜாவை காணவில்லையாம். தன் மகன் ராஜா வேலைக்காக வெளியூா் சென்றிருப்பதாக அக்கம்பக்கத்தினரிடம் அய்யம்மாள் தெரிவித்தாராம்.

இருப்பினும், இதில் சந்தேகமடைந்த உறவினா்கள், அண்மையில் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதன் பேரில் போலீஸாா் அய்யம்மாளிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராஜா மது அருந்திவிட்டு வந்து தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ாகவும், அவரிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இரும்புக் கம்பியால் தாக்கியதாகவும், இதில் உயிரிழந்த ராஜாவின் சடலத்தை வீட்டின் பின்புறம் கழிப்பறைக்காகத் தோண்டியிருந்த குழியில் போட்டு புதைத்து விட்டதாகவும் அய்யம்மாள் தெரிவித்தாா் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து, ராஜாவின் சடலத்தை மீட்கும் நடவடிக்கைகளை போலீஸாா் மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.