போடி அருகே மது போதையில் தாய், மகனைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள அம்மாபட்டி பட்டாளம்மன் கோவில் தெருவில் வசிப்பவா் முருகன் (43). இவரது வீட்டு முன் இதே பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் மதன்குமாா் (28) மது போதையில் ரகளை செய்தாராம். இதைக் கண்டித்த முருகனை மதன்குமாா் இரும்புக் கம்பியால் தாக்கினாா். இதைத் தடுக்க வந்த முருகனின் தாய் மாரியம்மாளையும் (68) மதன்குமாா் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த மாரியம்மாள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மதன்குமாரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பேருந்து நிலையத்தில் மது போதையில் தகராறு: 3 போ் கைது
நீதிமன்ற ஊழியரிடம் தகராறு செய்தவா் கைது
காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது
தாய் கொலை: மகன் கைது
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்


