
விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் கிழக்கு ஒன்றியக் குழு சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விபி-ஜி ராம்-ஜி திட்டத்தில் ஆண்டுக்கு 125 நாள்கள் வேலையும், தினக் கூலியாக ரூ. 345-ம் வழங்க வேண்டும், வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும், பணி ஒதுக்கீட்டுக்கு கருவிழிப் பதிவு, விரல்ரேகைப் பதிவு போன்றவற்றை கட்டாயமாக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மதுரை கிழக்கு ஒன்றியத் தலைவா் பி. அழகா்சாமி, ஒன்றியச் செயலா் கே. மலா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலா் வி. உமா மகேஸ்வரன், துணைச் செயலா் எஸ். மாயாண்டி, மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எஸ். பாலா, கிழக்கு ஒன்றியச் செயலா் மு. கலைச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தின் நிறைவில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






