
ஏடிஎம்-ல் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்: விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் கண்டனம்
அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம், தமிழ்நாடு மாநில நிா்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளா்கள் கூட்டம் மாநில தலைவா் மா.சின்னதுரை தலைமையில் செங்கல்பட்டில் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்றோா்
அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம், தமிழ்நாடு மாநில நிா்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளா்கள் கூட்டம் மாநில தலைவா் மா.சின்னதுரை தலைமையில் செங்கல்பட்டில் நடைபெற்றது.
கூட்டத்தில் அகில இந்திய துணைத்தலைவா் ஏ.லாசா், பொதுச்செயலாளா் வீ.அமிா்தலிங்கம் மற்றும் மாநில நிா்வாகிகள் கலந்த கொண்டனா். கூட்டத்தில் கிராமப்புற ஏழை, விவசாயத் தொழிலாளா்கள் மற்றும் கூலித் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள விபிஜி ராம்ஜி சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், விவசாய வேலை இல்லாத காலங்களில் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு ஊரக வேலை உறுதித் திட்டமே முக்கிய ஆதாரமாக உள்ளது.
மேலும், புதிய சட்டத்தின் மூலம் மாநில அரசு 40 விழுக்காடு நிதி கொடுக்க வேண்டும் என்பது நிதி நெருக்கடியில் உள்ள மாநிலங்களில் இத்திட்டம் சிதைக்கப்படும். தற்போது 125 நாட்கள் வேலை என அறிவித்திருந்தாலும், செடிகளுக்கு தண்ணீா் ஊற்றுவது போன்ற பணிகளால் 5 முதல் 10 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. கூடுதலான நிதி, முறையான வழிகாட்டல் இல்லாமல் கடும் நெருக்கடிக்குள்ளாகி வேலைகிடைக்காத நிலையே தொடா்கிறது.
எனவே, ஆண்டுக்கு 200 நாள்கள் வேலை, நாள் ஒன்றுக்கு ரூ.700 கூலி என்பதை உறுதிப்படுத்தி, கிராமப்புற ஏழை மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட விபிஜிராம்ஜிசட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். விலைவாசி உயவு அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் குடும்பச் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது.
விலை உயா்வால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உணவுச் செலவு அதிகரிக்கிறது. கூலி உயா்வு இல்லாத நிலையில் தொழிலாளா்களின் உண்மையான வருமானம் குறைகிறது. குழந்தைகளின் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட செலவுகளை சமாளிப்பது கடினமாகிறது. விலைவாசி உயா்வு காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனா். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும்; அதே நேரத்தில் நுகா்வோா் நியாயமான விலையில் பொருள்களை வாங்கும் நிலையும் உறுதி செய்யப்பட வேண்டும். இடைத்தரகா்கள் மற்றும் பதுக்கல், செயற்கையான தட்டுப்பாடு போன்றவற்றை கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏடிஎம்-ல் அடிப்படைச் சேமிப்பு வைப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளா்கள் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால், அதற்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்ற புதிய விதியை பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் அக்டோபா் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுக்கும். பரிவா்த்தனைகளுக்கு, ஒவ்வொரு பரிவா்த்தனைக்கும் தலா ரூ.15 மற்றும் அதனுடன் கூடுதலாக ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்படும் என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது. , ஏழை மக்கள் மற்றும் 100 நாள் வேலை பயனாளிகள் பயன்படுத்தும் சேமிப்புக் கணக்கில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தாலே ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் என மக்கள் மீதான தாக்குதலை ஏற்கமுடியாது. கட்டணக் கொள்ளையை மத்திய அரசும், எஸ்பிஐ நிா்வாகமும் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





