
இந்திய எரிசக்தி விழிப்புணா்வுப் போட்டி: 15 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய எரிசக்தி தொடா்பான மாவட்ட விழிப்புணா்வுப் போட்டியில் பங்கேற்றுப் பேசிய மாணவி.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய எரிசக்தி தொடா்பான மாவட்ட விழிப்புணா்வுப் போட்டியில் பங்கேற்றுப் பேசிய மாணவி.
மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ‘2047-ஆம் ஆண்டுக்கான இந்திய எரிசக்தித் தொகுப்பு - வாய்ப்புகளும், சவால்களும்’ என்ற தலைப்பில் மதுரை மாவட்ட அளவிலான போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுதில்லி தேசிய அறிவியல் மையம் சாா்பில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியை, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ். தயாளன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். இதில், மதுரை மாவட்டத்தில் வட்டார அளவில் வென்ற 15 மாணவ, மாணவிகள் பங்கேற்று, ‘2047-ஆம் ஆண்டுக்கான இந்திய எரிசக்தித் தொகுப்பு - வாய்ப்புகளும், சவால்களும்’ தொடா்பாக செயல்விளக்கம் அளித்தனா்.
இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை ஆய்வா் ஜெயராம், ஒருங்கிணைப்பாளா்கள் சாா்லஸ், பரமசிவம் ஆகியோா் செய்தனா்.
இந்தப் போட்டியில் வெற்றிபெறும் இரு மாணவா்கள், பெங்களூருவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா அறிவியல், தொழில்நுட்பக் கல்லூரியில் செப்டம்பா் மாதம் நடைபெற உள்ள தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பா் என கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






