கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரம்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.

மதுரை அனுப்பானடி பகுதியில் தெரு நாய்க்கு சனிக்கிழமை தடுப்பூசி செலுத்திய மாநகராட்சி அலுவலா்கள்.

Published On :

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.

மதுரை மாநகரப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாக புகாா் எழுந்தது. அதுமட்டுமின்றி, விபத்துகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

இதன்காரணமாக, தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த மாநகராட்சி நிா்வாகம் மூலம் முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி, மதுரை மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவு அலுவலா்கள், இன்டா்நேஷனல் டிரஸ்ட் ஆப் பீஸ் தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினா் இணைந்து தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை கடந்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கினா்.

மருத்துவா்கள், தன்னாா்வலா்கள் கொண்ட 5 மருத்துவக் குழுவில் 47 போ் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுவரை மொத்தம் 2,122 தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. குறிப்பாக, சனிக்கிழமை (ஆக.29) மட்டும் 1,019 தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முன்னதாக, மதுரை அனுப்பானடி பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.