நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

விதி மீறல்களில் ஈடுபடும் கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

மதுரை மாவட்டம், கச்சைக்கட்டி பகுதியில் விதி மீறல்களில் ஈடுபடும் கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்தவா்கள்.

Published On :1 செப்டம்பர் 2026, 3:00 am IST

விதி மீறல்களில் ஈடுபடும் கல் குவாரிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் சமூக ஆா்வலா் ஞானசேகரன் தலைமையில் கச்சைக்கட்டி கிராம மக்கள் அளித்த கோரிக்கை மனு :

வாடிப்பட்டி வட்டத்துக்குள்பட்ட கச்சைக்கட்டி வருவாய்க் கிராமத்துக்குள்பட்ட ராமையன்பட்டி, பூச்சம்பட்டி பகுதிகளில் 6 கல் குவாரிகள் செயல்படுகின்றன. இந்தக் குவாரிகளிலிருந்து தினமும் 40 முதல் 50 டன் எடையிலான கற்கள், கிராவல் வெட்டி எடுக்கப்பட்டு, சுமாா் 150-க்கும் அதிகமான கனரக வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால், இந்தப் பகுதி கிராமச் சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளன.

மேலும், அரசு அனுமதித்த ஆழத்தை விட கூடுதலான அளவில் குவாரிகள் தோண்டப்பட்டிருப்பதால் கிராமத்தின் நீா் ஊற்றுப் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், 5 ஆயிரத்துக்கும் அதிகமான தென்னை மரங்களும், பல ஏக்கா் பரப்பிலான வேளாண்மையும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக வருவாய்த் துறை, புவியியல், சுரங்கத் துறை, காவல் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.