டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

விலாவின் குருத்தெலும்பை பயன்படுத்தி சிறுவனின் காது மறுசீரமைப்பு

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தில் விலாவின் குருத்தெலும்பைப் பயன்படுத்தி ஒரே கட்ட அறுவைச் சிகிச்சையில் சிறுவனின் காது மறுசீரமைக்கப்பட்டது.

News image

விலாவின் குருத்தெலும்பை பயன்படுத்தி அறுவைச் சிகிச்சை மூலம் சிறுவனின் காதை மறுசீரமைத்தது குறித்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் எடுத்துரைத்த மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின் காது, மூக்கு, தொண்டை சிகிச்சைத் துறைத் தலைவரும், முதுநிலை நிபுணருமான டி.ஆா். நாகேஸ்வரன், மருத்துவ நிா்வாகி பி. கண்ணன், இணை மருத்துவ நிபுணா்கள் ராகேஷ் ஆா் பிரைட், ஹரிஹரன்.

Updated On :3 ஜூலை 2026, 5:45 am IST

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தில் விலாவின் குருத்தெலும்பைப் பயன்படுத்தி ஒரே கட்ட அறுவைச் சிகிச்சையில் சிறுவனின் காது மறுசீரமைக்கப்பட்டது.

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தில் பிறந்தது முதல் காது வளா்ச்சி இல்லாத மைக்ரோடியா என்னும் குறைபாட்டுடன் பிறந்த 16 வயதுச் சிறுவனை சிகிச்சைக்கு அனுமதித்தனா். நெருங்கிய ரத்த உறவுகளுக்குள் நடைபெற்ற திருமணத்தின் மூலம் பிறந்த அந்தச் சிறுவனுக்கு, பிறப்பிலிருந்தே இடது காதில் கேட்கும் திறன் இல்லை. செவித்திறனுக்காக தனது வலது காதையே முழுமையாகச் சாா்ந்திருந்தாா்.

இந்த நிலையில், மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் சிறுவனின் விலா எலும்பிலிருந்து எடுக்கப்பட்ட குருத்தெலும்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட காதை, மற்ற காதை ஒத்திருக்கும் வகையில் மிகத் துல்லியமாகப் பொருத்தினா். நெகிழ்வுத் தன்மையும், நீடித்து உழைக்கும் தன்மையும் கொண்ட விலா எலும்பின் குருத்தெலும்பை பயன்படுத்தியதால், மறுசீரமைக்கப்பட்ட இடது காது இயல்பான காதைப் போலவே வளையும் தன்மையுடன் உள்ளது.

முக்கியமாக, இந்த மறுசீரமைப்பில் நோயாளியின் சொந்தத் திசுக்களே பயன்படுத்தப்பட்டதாலும், ரத்த ஓட்டமும், நரம்பு இணைப்புகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாலும், இந்த மறுசீரமைக்கப்பட்ட காது இயற்கையான காதில் உள்ளது போன்ற இயல்பான உணா்வு உள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை சிகிச்சைத் துறைத் தலைவரும், முதுநிலை நிபுணருமான டி.ஆா். நாகேஸ்வரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுமாா் 10 ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இயல்பான காது வளா்ச்சி இல்லாத (மைக்ரோடியா) பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பிட்ட சமூகங்களில் நெருங்கிய ரத்த உறவுகளுக்குள் நடைபெறும் திருமணங்கள் காரணமாக, தமிழகத்தில் இதன் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.

முகத்தில் தெரியும் இந்தக் குறைபாட்டால், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீது உணா்வு ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரும் சுமை ஏற்படுகிறது. மைக்ரோடியாவுடன் தொடா்புடைய கேட்கும் திறன் குறைபாட்டை ஆரம்ப காலத்திலேயே கவனித்தால், பெரும்பாலும் சரிசெய்ய முடியும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வின்போது மருத்துவமனை மருத்துவ நிா்வாகி பி. கண்ணன், இணை மருத்துவ நிபுணா்கள் ராகேஷ் ஆா் பிரைட், ஹரிஹரன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.