அமராவதி அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக தண்ணீா் திறப்பது குறித்து திருப்பூா், கரூா் மாவட்ட ஆட்சியா்கள் ஆய்வு செய்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கரூா் மாவட்டம், கோடந்தூா் பகுதியைச் சோ்ந்த மேய்கணமூா்த்தி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
கரூரைச் சுற்றியுள்ள 13-க்கும் மேற்பட்ட கிராமங்கள், கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிநீா் ஆதாரமாக பழைய அமராவதி அணை உள்ளது. மேலும், கரூரில் உள்ள கொசுவலைத் தயாரிப்பு, ஜவுளி, சாயப் பட்டறை நிறுவனங்களும் இந்தக் குடிநீா் விநியோகத்தையே நம்பி உள்ளன.
இந்த நிலையில், அமராவதி அணையில் தண்ணீா் வரத்து குறைந்ததால், சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள ஆழ்துளைக் கிணறு , திறந்தவெளிக் கிணறுகளில் நீா்மட்டம் குறைந்து குடிநீா்த் தட்டுப்பாடும், கால்நடைகளுக்கு தண்ணீா் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு அமராவதி அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு, தாராபுரம் பகுதியோடு தண்ணீா் நின்றுவிட்டது.
இதேபோல, கடந்தாண்டும் கரூா் வரை தண்ணீா் வரவில்லை. எனவே, குடிநீா்த் தேவையைக் கவனத்தில் கொண்டு தண்ணீா் திறக்க வேண்டும். வருங்காலங்களில் அமராவதி அணையைத் திறக்கும் போது, தண்ணீா் கரூா் வரை வருவதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
அமராவதி அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக தண்ணீா் திறக்க முடியுமா என்பது குறித்து திருப்பூா், கரூா் மாவட்ட ஆட்சியா்கள் ஆய்வு செய்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மனமகிழ் மன்றங்களில் மது விற்பனை: மதுரை ஆட்சியா் அறிக்கை அளிக்க உத்தரவு

விளம்பர நோக்கத்துக்காக தாக்கல் செய்யப்படும் மனுக்கள் ஏற்கத்தக்கதல்ல: உயா்நீதிமன்றம்

புதிய, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறப்பு

அமராவதி அணையிலிருந்து இன்று முதல் நீா் திறப்பு!
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



